பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

ஏற்படுகிறது? நீரை இறுகச் செய்தால் அது ஐஸாக மாறுகிறது. இறுகச் செய்வது என்றால் என்ன? குளிரச் செய்வது.

ஐஸ்கட்டியைச் சூடாக்கினால் நீராகிறது. நீரைக் கொதிக்க வைத்தால் ஆவியாகிறது. ஆவிலேசாக இருப்பதால் மேலே எழும்புகிறது.

ஆகவே, நீரைக் கொதிக்க வைத்தால் ஆவியாகிறது. குளிர வைத்தால் கட்டியாகிறது.

நீர், நீராவி, ஐஸ் ஆகிய மூன்றும் வேறு வேறு பொருள்களா? இல்லை. ஒன்றே. பொருள் ஒன்று; உருவம்தான் வேறு.

தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு போன்ற உலோகங்களும் இத்தகையனவே.

இவற்றை உருக்கினால் திரவமாகின்றன மேலும் உருக்கிக் கொண்டே இருந்தால் ஆவியாக மாறுகின்றன. குளிரச் செய்தால் கட்டியாகின்றன.

தண்ணீரும், தங்கமும், வெள்ளியும், ஈயமும், இரும்பும், செம்பும், சூடேற்றப் பட்டால் ஆவியாவது ஏன்? குளிரச் செய்தால் கட்டியாவது ஏன்.

எல்லாம் அணுவின் செயல்தான்.