பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

பல வித அணுக்களின் சேர்க்கையே தண்ணீராகக் காட்சி அளிக்கிறது. தங்கமாகத் தெரிகிறது; வெள்ளியாகக் காட்சி தருகிறது; ஈய உருவில் தோன்றுகிறது; செம்பாகத் தெரிகிறது.

ஒரு பொருளைக் குளிரச்செய்யும் போது என்ன ஆகிறது. இந்த அணுக்கள் நெருங்கி, இணைந்து ஒன்றை மற்றொன்று கட்டிக் கொள்கின்றன. ஆகவே கட்டியாகின்றன.

தண்ணீர், ஐஸாக மாறும் போது இந்நிலைதான் ஏற்படுகிறது. எனவே ஐஸ் கட்டியைக் காண்கிறோம்.

சூடு ஏற்றினால் என்ன ஆகிறது. அணுக்கள் விலகிப் போகின்றன. ஆகவே ஐஸ் கட்டிக்குச் சூடு ஏற்றினால் தண்ணீராகிறது. மேலும் சூடு ஏற்றினால் ஆவியாகிறது. லேசாகி மேலே போகிறது. அணு, அதாவது கன வாயு ஆகிறது.

ஆகவே விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்.

"உலகத்தில் உள்ள பொருள்கள் எல்லாம் கனப் பொருள்களாயும், திரவப் பொருள்களாயும், கனவாயுப்பொருள்களாயும்