பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

ஆகும்? அவை ஒன்றை மற்றொன்று அணைத்துக் கொள்ளுமா? கொள்ளாது. குஸ்தி போடும். உதைக்கும். விரட்டும். இதுவே, மின்சாரத்தின் தன்மை.

எலக்ட்ரான் என்று கூறப்படுகிற இந்த மகாசக்தி செய்கிற அற்புதங்களை என்ன என்று சொல்வது! பார்க்கப் போனால் இது ஒரு சிறு பொறி. ஆனால் இதன் சக்தியே மகத்தானது.

இந்த மகாசக்தி எப்படிப்பட்டவள் தெரியுமா?

இவள் ஏதாவது ஒரு பொருள் மீது தாக்கினால் அப்பொருள் சூடாகி விடும். தணல் போல் பழுத்து விடும். சூழ்நிலைகளை எல்லாம் தன் மயமாக்கும் தன்மை கொண்டவள் இவள்.

வான வீதியிலே பறந்து திரிகிற காலத்திலே இவள் செல்லுமிடம் எங்கும் மின் சக்தி மயமாகிறது.

எத்தகைய கடினப் பொருளாயினும் ஊடுருவிச் செல்லும் சக்தி இவள்; அசையாத பொருள்களை எல்லாம் அசைக்கக்கூடியவள்.

வான வீதியிலே பறந்து திரிகிறாள்