பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

கண் இமைப் பொழுதிலே இவை பீறிட்டு ரடானாக மாறுகின்றன. இம் மாறுதல் இயற் கையில் நடந்து கொண்டே இருக்கிறது.

உலகத்திலே பிறந்த எல்லாரும் வள்ளல்களாகத் திகழ்வது இல்லை.

முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் என்று ஒருவனைத்தான் புகழ்கிறோம். மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் என்று ஒருவனைத்தான் போற்றுகிறோம். 'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்று ஒருவனைத் தான் வாழ்த்துகிறோம்.

உலகத்தின் நலன் கருதிப் பாடுபடுவோர் சிலரே. ஆனால் இந்த உலகிலே லோபிகளும் இருக்கிறார்கள். கஞ்ச மகாப் பிரபுக்கள் இருக்கிறார்கள். கெஞ்சினாலும், கூத்தாடினாலும் கொடாக்கண்டர் உளர். இவர்கள் தங்கள் பொருளைக் கொள்ளையரிடம் இழத்தலும் காண்கிறோம்.

வள்ளல் பரம்பரையில் சேர்ந்தது ரேடியம். எவரும் கேளாமலே தன்னிடம் உள்ளவற்றைப் பீறிட்டு அடிக்கும்.

தோரியம் என்பது ஓர் உலோகம். அதிலே ரேடியோ ஆக்டிவ் அணுக்கள்