பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

ஏராளம். ஆனால் அந்த அணுக்களைப் பீறிடச் செய்தல் எளிதன்று.

உலோபிகளைக் கொள்ளைக் கூட்டத்தினர் வளைத்து நெருக்கும்போது இரும்புப் பெட்டிச் சாவியை வீசி எறிகிறார்கள் அல்லவா! அம்மாதிரி, நெருக்கினால்தான், தோரியம் தனது அணு சக்தியைப் பீறிட்டு அடிக்கும்.


7. சூரிய மண்டலத்தில் சித்து விளையாட்டு


சூரியனுக்கும் ரசவாதத்துக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் உண்டு. ரசவாதம் என்று சொல்லப்படுகிற இந்த சித்து விளையாட்டு சூரிய மண்டலத்திலே நடக்கிறது. அது எப்படி? எப்படி என்று அறிய வேண்டுமானால் முதலில் சூரிய மண்டல அமைப்பு பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

சூரியனுக்கும் நமக்கும் இடையிலே உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா? எண்பது கோடியே முப்பது லட்சம் மைல்.