பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

எது? பரம அணுவிலே காணப்படும் மகா சக்தியே.

சூரிய மண்டலத்தின் வெளிப்பாகத்திலே இருப்பதைவிட உள்ளேதான் சூடு அதிகம். காரணம் உள்ளே அமுக்கும் சக்தி அதிகம். அதனால் பல்வேறு பரமாணுக்களும் மின் வேகத்திலே சுற்றுகின்றன; சுழல்கின்றன; திரிகின்றன; முட்டுகின்றன; மோதுகின்றன; மல்யுத்தம் செய்கின்றன. குத்துச்சண்டை போடுகின்றன.

இவ்விதம் நடப்பதால் பரமாணுக்களின் அணுசக்தி பீறிட்டுப் பாய்கின்றன. அவ்விதம் பீறிடும் சூரியகாந்த மின் கதிர்கள் வெகு வேகத்துடன் வெளிப்படுகின்றன.

சூரிய மண்டலத்தைச் சுற்றியுள்ள வாயுக் கோட்டையை ஊடுருவிக் கொண்டு வெளிவருகின்றன. அவ்விதம் வரும்போது ஒளியாகக் காட்சி தருகின்றன.

ஆகவே, சூரிய மண்டலத்தில் அணுக்கள் செய்கின்ற மகத்தான குஸ்தியினாலே அணுசக்தி பீறிடுகின்றது. அந்த அணு சக்தியே சூரிய கிரணங்கள் அவை, மின் கதிர்கள், உஷ்ணக் கதிர்கள். வாயு மண்ட லத்தில் பாய்ந்து வரும் வெம்கதிர்களே