பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

சூரிய வெளிச்சம் என்றும், வெய்யில் என்றும் அழைக்கப்படுகின்றன.


8. பூமியின் வயது என்ன?


பூமியின் வயது என்ன? அதாவது, இந்த பூமி தோன்றி எவ்வளவு காலம் ஆகிறது?

"சுமார் இருநூறு கோடி ஆண்டுகள் முன்பு இந்த பூமி தோன்றியிருக்கவேண்டும்" என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

எந்த அடிப்படையில் அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்?

இயற்கையில் நடைபெறும் ரசவாதம் இருக்கிறதே! அதன் அடிப்படையில்தான் அவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள். எப்படி என்று கவனிப்போம்.

யூரேனியம் என்பது ஓர் உலோகம். தோரியம் என்பது மற்றோர் உலோகம். இவை இரண்டும் ஈயமாக மாறுகின்றன. இப்படி மாறியுள்ள ஈயத்தின் அளவைக்