பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கொண்டு பூமியின் வயதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

உலகத்திலே மொத்தம் எவ்வளவு ஈயம் இருக்கிறது? இவ்வளவு ஈயமும் ஏற்பட எவ்வளவு காலம் ஆகும்?

இதுவே, புவி இயல் அறிஞர்கள் போட்ட கணக்கு.

ஓர் ஆண்டுக் காலத்திலே ஒரு கிராம் யூரேனியத்திலிருந்து 1/7, 600,000,000 கிராம் ஈயம் கிடைக்கிறது.

ஒரு கிராம் தோரியத்திலிருந்து ஒரு வருஷ காலத்தில் 1/28, 000,000,000 கிராம் ஈயம் கிடைக்கிறது.

இதைக் கொண்டு கணக்குப் பார்த்ததில் என்ன தெரிந்தது? உலகத்திலே மிகப் பழமையான ஈயப் பாறை எதுவோ அதன் வயது தெரிந்தது. அதாவது அந்த ஈயப் பாறையின் வயது நூற்று எண்பத்து ஐந்து கோடி வருஷங்கள் என்று தெரிந்தது.

இந்த அளவில் நின்றார்களா புவி இயல் அறிஞர்கள்? இல்லை. மேலும் சோதிக்கத் தொடங்கினார்கள். கடல்களின் வயது என்ன என்று கண்டுபிடிக்க முற்பட்டார்கள்.