பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

ஆண்டுகள் ஆகின்றன? சுமார் இரு நூறு கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன.

பூமியின் வயதும் அதுவே. அதாவது இரு நூறு கோடி ஆண்டுகள்.


9. பூமி தோன்றியது எப்படி?


பூமி தோன்றியது எப்போது என்று கண்டோம். எப்படித் தோன்றியது என் பதை இப்போது காண்போம்.

பூமி உருண்டையாயிருக்கிறது. இதன் குறுக்களவு சுமார் எட்டாயிரம் மைல். பூமியின் மேல் பரப்பு கல்பாறையாகக் காட்சியளிக்கிறது. ஆனால் பூமி முழுதும் இப்படி இல்லை.

சுமார் ஐந்து மைல் ஆழம் வரைதான் இப்படி இருக்கிறது. அதற்கு அடியிலே இரண்டாயிரம் மைல் ஆழம் வரை கொதிக்கும் பாறைக் குழம்பு! இன்னும் ஆழத்திலே இதைவிடக் கனமான இரும்பு. பழுக்கக் காய்ச்சிய இரும்புக் குழம்பு! இப்படி யிருக்கிறது பூமி.