பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

இது, தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இதற்கு ‘ரிதமிக் ஆக்ஷன்' என்று இங்கிலீஷிலே சொல்வார்கள்.

பெண்களின் நடைக்கும், அண்டாவின் அலைக்கும் என்ன சம்பந்தம்? வேகமாக நடந்தால் அலை வேகமாக மோதுவது ஏன்? மெதுவாக நடந்தால் அலை மெதுவாக மோதுவது ஏன்?

வேகத்தினால். அண்டா நீரை வேகம் அமுக்குகிறது. அதனால் அலை எழும்புகிறது. நடையின் வேகம் அதிகமானால் அமுக்குதலும் வேகமாக நிகழும். அப்போது அலையும் வெகுதூரம் எழும்பும். நீர் ததும்பி வெளியே கொட்டும்.

இதே மாதிரி பூமியிலும் அலை எழும்பியது. எப்படி?

தலை நாளிலே பூமியின் மேல் பகுதி சிறிது கெட்டிப்பட்டிருந்தது என்று சொன்னேன். உள் பகுதி திரவமாயிருந்தது என்று சொன்னேன்.

பூமியானது நான்கு மணி நேரத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருந்த