பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

போது, பூமியின் உள்பகுதியிலே இருந்த திரவத்தில் அலை எழும்பியது. பூமி சுற்றச் சுற்ற அலையின் அமுக்குதலும் விசை முடுக்கியது போல் ஆயிற்று.

அவ்விதம் முடுக்கி விடப்பட்ட அலைகள் பூமியின் மெல்லிய ஓட்டைத் தாக்கின; மோதின. இவ்விதம் மோதியதால் அம் மெல்லிய ஓடு நொறுங்கியது. பூமி சுழன்ற வேகத்திலே நொறுங்கிய பகுதியிலே ஒன்று, தொலைவில் போயிற்று.

அவ்விதம் போனதே சந்திரன்!

பூமியிலிருந்து விலகிப் போன ஓடு தவிர, மீதமுள்ள நொறுங்கிய துண்டுகள் என்ன ஆயின. குளத்திலே தெப்பம் மிதப்பது போல் மிதந்து கொண்டிருந்தன. அப்படி மிதந்த துண்டுகளே இப்போது நாம் காணும் நிலப்பாகம்; தேசங்கள்.

பூகோள படம் ஒன்றைப் பார்த்தால் ஆப்பிரிக்காக் கண்டம் வெகு தூரத்தில் தெரியும். அமெரிக்கா, அதைவிட வெகு தூரத்தில் தெரியும். இடையே பெரும் கடல். ஆனால் பூமியிலிருந்து சந்திரன் பிறந்த காலத்திலே இப்படி இல்லை. இவை ஒன்றாக இருந்தன.