பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

பூமியின் ஓடு நொறுங்கியதால் சந்திரன் பிறந்தான். நொறுங்கிய மற்ற ஓடுகள் நிலை கொள்ளாமல் மிதந்தன. மிதந்து மிதந்து அவை தொலைவில் விலகிப் போயின.

மேல் ஓடு விலகிப் போகவே, அடியில் இருந்த திரவக்குழம்பு இறுகத் தொடங்கியது.

மிதந்து கொண்டிருந்த ஓடுகள் நிலையாக நின்றன. மிதப்பதும் ஓய்ந்தது.

பூமி சுற்றிக்கொண்டேயிருந்தாள். மேலும், மேலும் சுற்றிக்கொண்டே யிருந்தாள். இருளிலே வெகு வேகமாகச் சுற்றினாள். மேடு பள்ளங்கள் இல்லாது இருந்த அவள் மேனியில் மேடு பள்ளங்கள் தோன்றின. அவள் மேலும் ஆனந்தமாகச் சுற்றினாள். பம்பரம் போல் சுற்றினாள். மிகுந்த கர்வத்துடனே சுற்றினாள். அவள் மீது வெளிச்சம் படவில்லை . ஒரே இருளாயிருந்தது.


11. இருள் விலகியது


இவ்விதம் பூமியானது இருளிலே சுற்றிக் கொண்டிருந்த அந்த நாளிலே கடல்கள்