பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

பெருமலைகளிலே ஒன்று. வயதில் சிறியது. வயது என்ன? நாலு கோடி.

மலைகள் தோன்றிய பின் என் ஆயிற்று?

தட்ப வெப்பங்களில் மாறுதல்கள் நிகழ்ந்தன.


13. கல் சொல்லும் கதை


இந்த உலகத்தில்தான் எத்தனை விதமான உயிர் இனங்கள்! ஒன்றா? இரண்டா? ஆயிரம்! ஆயிரம்! பல்லாயிரம்! இவை எல்லாம் எப்படித் தோன்றின? இப்போது நாம் பார்க்கிறபடியேதான் தோன்றினவா?

இல்லை. இவை ஒரே நாளில் தோன்றியன அல்ல. யுகம் யுகமாக - கோடிக் கணக்கான ஆண்டுகளாகக் கால தேவன் காட்டிய கைத்திறன். பார்த்துப் பார்த்து நகாசு செய்து, மெருகிட்டுக் காட்டும் விந்தை\!

பூமியிலே உயிர் இனங்கள் தோன்றி யதும் வளர்ந்ததும் விந்தையான கதை!