பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

மலைகளிலே தோன்றும் ஆறுகள் பாறைகளை உருட்டிச் செல்கின்றன. பூமியையும் அகழ்ந்து செல்கின்றன. கொண்டு போய் கடலில் கொட்டுகின்றன. இவ்வாறு நாள்தோறும் நடக்கிறது. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இப்படி நடந்தால்... கடல் அடியிலே வண்டல் படிகிறது. மேலும் மேலும் அடுக்கு அடுக்காகப் படிகிறது. படிந்து படிந்து இறுகி, இறுகி, இறுகி அவை பாறை ஆகின்றன. இந்தச் சேற்றிலே சிக்கிக் கொள்ளும் உயிர் இனங்கள் அப்படியே 'சமாதி' ஆகின்றன.

யுகம், யுகமாக- கோடிக்கணக்கான ஆண்டுகளாக இவ்விதம் நடைபெற்றால் என்னாகும்? ஏராளமான உயிர் இனங்கள் சமாதியாகும் அல்லவா!

புதைபட்டுப் புதைபட்டு அவை அப்படியே மண்ணோடு இறுகி விடும். அவற்றின் உருவச் சுவடும் அப்படியே பாறையில் அமையும்.

மழைக்காலத்திலே நாம் சேற்றிலே நடக்கிறோம். நமது கால் சேறிலே பதிகிறது. கால்நடைகள் நடக்கின்றன. அவற்றின் கால்களும் பதிகின்றன. பிறகு