பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

வெயில் காய்கிறது. மனித அடிச் சுவடும், மாடுகள் அடிச் சுவடும் அப்படி அப்படியே இறுகிக் காய்ந்து காட்சி தரவில்லையா! அந்த மாதிரி.

நில நடுக்கம் ஏற்படும் காலத்திலே கடலுக்கு அடியிலே உள்ள வண்டல் பாறைகள் மேலே எழும்புகின்றன. இத்தகைய பாறைகளை ஆராயும்போது பலவித உயிர் இனங்களின் 'சுவடுகள்' பாஸில்கள் கிடைக்கின்றன.

சென்ற 150 ஆண்டுகளாகப் புவி இயல் அறிஞர்கள் ஏராளமான பாஸில்களைக் கண்டு பிடித்து இருக்கிறார்கள். அந்த பாஸில்களை எல்லாம் ஒருங்கு சேர்த்துத் தொகுத்திருக்கிறார்கள். அந்தத் தொகுப்பு அருமையான கதை சொல்கிறது. அதுவே உயிர் இனங்கள் வளர்ந்த கதை.

இந்தக் கதைப் புத்தகத்துக்கு 'புக் ஆப் செடிமெண்ட்ஸ்' என்று பெயர். வண்டல் குன்றுகள் கூறும் வரலாறு' என்று பொருள். இதுவே உயிர் இனங்களின் சுயசரிதம். கல் சொல்லும் கதை.