பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14. கால கோபுரம்

ஏதாவது ஒரு நிகழ்ச்சியைச் சொல்லும் போது, அது நிகழ்ந்த காலத்தையும் குறிப்பிடவேண்டும். அப்போது தான் அதற்குத் தக்க ஆதாரம் ஏற்படும். சரித்திரம் எழுதுகிறவர்களும் அப்படித்தான். இன்ன சமயத்திலே இன்ன சம்பவம் நிகழ்ந்தது என்று திட்ட வட்டமாகச் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால்தான் அதற்குத் தக்க ஆதாரம் ஏற்படும்.

உயிர் இனங்கள் பூமியில் தோன்றி வளர்ந்த கதையை நமக்குச் சொல்ல வந்த அறிஞர்களும் இதே முறையைத் தான் பின்பற்றி யிருக்கிறார்கள்.

சுமார் இரு நூறு கோடி ஆண்டுகள் முன்பு தான் பூமியில் உயிர் தோன்றியது. இந்த இரு நூறு கோடி ஆண்டுகளையும் ஐந்து யுகங்களாகப் பிரித்திருக்கிறார்கள். பூமி தோன்றிய நாள் முதல் இது வரை எவ்வளவோ மாறுதல்களை அடைந்துள்ளது என்று கூறினோம். அந்த மாறுதல் ஏற்படும்