பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

இங்கிலாந்திலே ஒரு பகுதியிருக்கிறது, வேல்ஸ் என்று பெயர். ரோம சாம்ராஜ்யத்தின் கீழே ஒருகாலத்தில் இப்பகுதி இருந்தது. அப்போது அதற்குக் 'கேம்ப்ரியா' என்று பெயர். அங்கே சில பாஸில்கள் கிடைத்தன. அதே மாதிரி கால அளவில் உள்ள வரிசைகளுக்கு எல்லாம் கேம்ப்ரிய சகாப்த வரிசை என்று பெயர் கொடுத்தார்கள்.

இங்கிலாந்திலே மற்றொரு பகுதி உள்ளது. அதற்குப் பெயர் என்ன தெரியுமா? ‘திவான்ஷைர்' என்பது. இந்தப் பகுதியிலே சில பாஸில்கள் கிடைத்தன.

இந்த மாதிரி வரிசைக்குத் திவோனிய சகாப்த வரிசை என்று பெயர் கொடுத்தார்கள்.

அமெரிக்காவிலே உள்ளது மிசிசிப்பி. அங்கே சில பாஸில்கள் கிடைத்தன. அவற்றைப் போன்ற வரிசைகளுக்கு மிசி சிப்பி சகாப்தம் என்று பெயர் கொடுத்தார்கள்.

பென்சில்வேனியே என்பதும் அமெரிக் காவில் உள்ள மற்றோரிடம். அங்கே சில பாஸில்கள் கிடைத்தன. அந்த மாதிரி