பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
66



இனி, நாடகம் தொடங்கப் போகிறது. ஜீவ நாடகம். பல விதமான நடிகர்கள் நம் முன்னே தோன்றப் போகிறார்கள்; தோன்றி நடக்கப் போகிறார்கள்; நடித்து மறையப் போகிறார்கள். நமது உணர்ச்சியைத் தூண்டப் போகிறார்கள். வியப்புக் கடலில் வீழ்த்தப் போகிறார்கள்.

திரை விலகுகிறது. முதல் காட்சி தொடங்குகிறது. ஐம்பது கோடி ஆண்டுகள் முன்னே போகிறோம்.

பழைய ஜீவ யுகம். உலகம் வெறிச்' சென்று இருக்கிறது. பூமியில் புல் பூண்டு எதுவும் இல்லை. பசுமை என்பதே எங்கும் காணவில்லை. மரம் செடிகள்! கொடிகள்! எவையுமே இல்லை.

ஆறுகள் அமைதியாக ஓடுகின்றன. சூரியன் வெப்பத்தைப் பொழிகிறான். நீர் கிலைகள் ஆவியாகின்றன. மேகமாகின்றன. பின் மழையாகி மண்ணில் வீழ்கின்றன. கடல்கள் கொந்தளிக்கின்றன. அலைகள் எழுகின்றன; விழுகின்றன.

உலகின் மீது உயிர் இனம் எதுவுமே இல்லை. கிரீச்” என்று ஒலிப்பதற்குப் பறவை