பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

இல்லை. உ.றுமுதற்கு விலங்குகள் இல்லை. அமைதி! அமைதி! எங்கும் ஒரே அமைதி!

மூன்று அங்குல நீளத்திலே ஓர் உயிர் இனம் கடலிலே தோன்றுகிறது. எவ்வளவு பெரிய உயிர் பாருங்கள் ! 'டிரிலோ பைட்' என்று இதற்குப் பெயர்.

மிகப் பெரிசு என்று சொல்லக் கூடிய ‘டிரிலோ பைட்' பதினெட்டு அங்குல நீளமே இருக்கும். இன்றைய நான்கு இனங்களின் மூதாதைகள் இவை.

சுமார் பதினான்கு கோடி வருஷங்கள் கடலிலே தனியரசு செலுத்தியவை இந்த ‘டிரிலோ பைட்' இனங்களே.

முதல் இரண்டு சகாப்தங்கள் முடியும் வரை வாழ்ந்து, பின் ஏற்பட்ட யுகப் பிரளயத் திலே இந்த ‘டிரிலோ பைட்'களும் ஒழிந்தன; ஒழிந்தே போயின.

மூன்றாவதாகிய சிலூரிய சகாப்தம் தோன்றுகிறது. பூமியானது புதிய பொலிவு பெற்று விளங்குகிறது. கடல்கள் உள் வாங்குகின்றன.

கடல்கள் விலகிச் சென்ற சதுப்பு நிலங்களிலே கடற் பூண்டுகள் முளைக்கின்றன.