பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

குச்சி போல் நீண்டு ஆகாயத்தை அளாவும் வகையில் மரங்கள் முளைக்கின்றன.

கடலிலே புதிதோர் இனம் தோன்றுகிறது. உயிர் இனம். மீன் போல் இருக்கிறது. இன்றைய சுறா மீன்களின் மூதாதைகள் இந்த மீன்கள். இவற்றிற்குச் கண்களும் பற்களும், முதுகு எலும்பும் காணப்படுகின்றன.

சிலவற்றிற்கு மூன்று கண்கள் காணப்படுகின்றன. நீரிலே வெகு வேகமாக இவை நீந்துகின்றன. துள்ளித் திரிகின்றன. இவற்றிற்குப் பிறகு உயிர் இனங்களின் பவனி வெகு வேகமாக நடைபெறுகிறது.

ஜலமண்டலி, நட்டுவாக்கிளி முதலியவற்றின் மூதாதைகளான கடல் தேள்களும் தோன்றுகின்றன.

போர்! போர்! பெரும் போர்! கடலிலே போர்! பெரிய உயிர் இனங்களுக்கும் சிறிய உயிர் இனங்களுக்கும் போர். பெரிய உயிர் இனங்கள் சிறியவற்றை விழுங்கி விடுகின்றன. சிறியவை அழிகின்றன. பெரியவை கொழுக்கின்றன.

இவ்விதம் மூன்றரைக் கோடி ஆண்டு