பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

கள் ஓடிப் போகின்றன. சிலூரிய சகாப்தம் முடிகிறது.

திவோனிய சகாப்தம் தொடங்குகிறது. சதுப்பு நிலங்களிலே மேலும் அடர்ந்த மரங்கள் வளர்கின்றன. காடுகள் தோன்றுகின்றன. கடலிலே கடக்கும் சண்டைக்குப் பயந்து சில மீன்கள் நிலத்துக்கு வருகின்றன, உயிருக்குப் பயந்து வருகின்றன. உணவுக்கு வகை தேடி வருகின்றன. நீரிலே வாழ்ந்த இவற்றிற்கு இச்சதுப்பு நிலம் ஓரளவு ஆறுதல் அளிக்கிறது; ஆதரவு அளிக்கிறது. நீரிலே நீந்தலாம். அந்த மாதிரி சதுப்பு நிலத்திலே நீந்த முடியுமா? முடியாது.

வாழ முடியுமா? முடியாது. போராட்டம்! போராட்டம்! வாழ்வதற்குப் போராட்டம்! தவிக்கின்றன. தத்தளிக்கின்றன. அந்தப் போராட்டத்தினால் அவற்றின் உரு மாறுகிறது. சூழ்நிலைக்குத் தக்கபடி மாறுகிறது, வாழ்க்கைக்குத் தகுந்தவாறு மாறுகிறது! அவற்றின் உடலிலே பக்கவாட்டில் கால்கள் முளைக்கின்றன. அந்தச் சதுப்பு நிலத்திலே இவை தத்தித் தத்தித் திரிகின்றன.

எனினும் இவற்றிற்குப் பிறந்த வீட்டு ஆசை போகவில்லை. அடிக்கடி கடலுக்குச்