பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

சென்று திரும்புகின்றன ஏன்? முட்டையிட. தவளைகளின் மூதாதைகள் இவை.

நாலரைக் கோடி வருஷங்கள் செல்கின்றன. திவோனிய சகாப்தமும் முடிகிறது. மிசி சிப்பி, பென்சில்வேனிய சகாப்தங்கள் தொடங்குகின்றன. காடுகள் வளர்கின்றன. மேலும் வளர்கின்றன. அடர்ந்து வளர்கின்றன. வானோங்கி வளர்கின்றன. அசாத்தியமான ராட்சஸ வளர்ச்சி!

சதுப்பு நிலம் எவ்வளவு தான் தாங்கும்! வளர்ந்த மரங்கள் பெயர்ந்து வீழ்கின்றன. சதுப்பு நிலத்தில் அமிழ்கின்றன. இவற்றிற் கிடையே ஓணான் மாதிரி சில உயிர் இனங்கள் தவழ்கின்றன.

அவை எவை? சென்ற சகாப்தத்திலே கடலிலிருந்து வந்தவை. இவற்றிற்குப் பெரு வயிறும் பக்க வாட்டில் கால்களும் இருக்கின்றன. அரணை, பல்லி, ஓணான், முதலை இவற்றின் மூதாதைகள் இவை. வாழ்க்கை அமைதியாக நடக்கின்றது.

சதுப்பு நிலத்திலே வீழ்ந்து அழுகி, மக்கி மண்ணோடு மண்ணான மரங்களே நிலக்கரி ஆயின. ஆகவே, இந்த இரண்டு சகாப்தங்