பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

யும், கடலையும் அதிரச் செய்த அதிசயத்தைக் காண்போம்.


16. அசுர ஜீவன்களின் அட்டகாசம்


மத்திய ஜீவயுகம் தொடங்கிற்று. பூமியின் பெரும் பகுதியைப் பனி மூடிக் கொண்டது. பனி! பனி! எங்கும் ஒரே குளிர்! தாங்க முடியாத குளிர். சதுப்பு நிலங்கள் எல்லாம் உறைந்தன. மரங்கள் செடிகள் எல்லாம் அழிந்தன. சதுப்பு நிலத்திலே சோம்பேறி வாழ்க்கை நடத்தி வந்த உயிர் இனங்களுக்கு இப்போது சோதனை காலம்.

நீண்ட காலம் வரை பனி விலகவே இல்லை. உறைந்து கிடந்தது. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் சென்றன. பூமியின் தட்ப வெப்ப நிலையில் மாறுதல் தோன்றியது. சிறிது சிறிதாகப் பனி விலகியது. மீண்டும் பூமியிலே உயிர்த் துடிப்பு ஏற்பட்டது.

பூமி தேவியானவள் புதுமை பெற்றாள்; பொலிவுடன் விளங்கினாள். பல விதமான பூச்சிகள் தோன்றின. ஆனால் பூமியின்