பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

எல்லாப் பகுதிகளிலும் காடுகள் தோன்றின; வளர்ந்தன. அந்தக் காட்டினிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக முன் கண்ட ஓணான் இனம் தோன்றியது. ஆனால், இப்போது அவை முன் போல இல்லை. பக்க வாட்டிலே இருந்த கால்கள் இப்போது அவற்றிற்கு வயிற்றின் அடிப்பாகத்திலே தோன்றின. விரைவாக நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்றபடி ஆயின. அவை தமது பின் கால்களால் நடக்கத் தொடங்கின. முன் கால்கள் இரண்டும் இரை தேடுவதற்கு உதவின.

சிறு உருவில் தோன்றிய இவை, வர வரப் பெரிதாயின. இவற்றிற்கு ‘தினோ சுரஸ்' என்று பெயர். தினோசுரன் என்று நாம் மருவி வழங்கலாம்.

இந்த தினோசுரன் இனம் நாளடைவில் பெருகிற்று. 'அனடோசுரன்' என்பதும் இந்த இனத்திலே ஒன்று. இதன் வாயிலே இரண்டாயிரம் பல்! எனினும் வாத்து போன்ற மூக்கு! இவை தம் எதிரே அகப்பட்ட பூச்சிகளை எல்லாம் தின்று வளர்ந்தன.

இந்த அசுரப் பிராணிகள் காலப் போக்கில் பேருருவம் பெற்று விட்டன. 'ஸ்டெகோ