பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74


சுரன்' என்பது ஒன்று. இருபது அடி நீளம இருக்கும்.

இதன் முன்கால் இரண்டும் பெரியவை. பின் கால்கள் சிறியவை. முதுகிலே தலையிலிருந்து வால் வரை, கத்தி போன்ற ஓடு. கூர்மையான ஓடு. இது தற்காப்புக்காக ஏற்பட்டது போலும்!

இதே மாதிரி இன்னொரு விதம் ‘டிரனாசுரன்' என்று பெயர். தலைமுதல் வால் வரை மொத்தம் நாற்பத்து ஐந்து அடி நீளம்! முன்கால்களைத் தூக்கிக் கொண்டு பின் கால்களால் நடக்கும். நடக்கும் போது பார்த்தால் இருபது அடி உயரம் இருக்கும். இந்த யுகத்திலே அரசனாக விளங்கியது ‘டிரனாசுரன்'தான். பயங்கரமான பிராணி. மிகப் பயங்கரம்.

இந்த இனமானது அந்தக் காட்டிலே அட்டகாசம் செய்து வாழ்ந்தது. எதிரே கண்ட உயிர் இனங்களை எல்லாம் கொன்று தின்றது.

அந்தக் காட்டிலே இந்த ‘டிரனாசுர'னின் அட்டகாசம்தான் பிரமாதமாயிருந்தது. ஒன்று டன் மற்றொன்று. போரிடுவதும், ஒன்றை மற்றொன்று கொன்று தின்பதும் இவற்றின்