பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

மற்ற எல்லா அம்சங்களிலும் இவை அந்த அசுரப் பிராணிகளைப் போன்றவையே.

சிறகுகள் தோன்றியதால் இவை, குளிர் தாங்கும் சக்தி பெற்றன. 'டிரனாசுரன்' போன்ற அசுரப் பிராணிகளுக்கு இரையாகாமல் குளிர்ப் பிரதேசங்களுக்குப் பறந்து சென்று தப்பிப் பிழைத்தன! இந்த 'ஆர்க்கி யோப்டரிக்ஸ்'!

இந்த விதமாகச் சுமார் பதினொரு கோடி ஆண்டுகள் சென்றன. அசுரப் பிராணி களான இவை, நீர், நிலம், வானம் ஆகிய மூன்றிலும் அரசு செலுத்தின.

மத்திய ஜீவ யுகத்தின் முடிவு காலம். பூமியை மீண்டும் பனி மூடியது. குளிர்! குளிர்! தாங்க முடியாத குளிர்.

இந்த அசுரப் பிராணிகளும் குளிர் தாங்க முடியாமல் இறந்தன; அழிந்தன. இவற்றின் வம்சமே பூண்டோடு ஒழிந்தது. குளிர் கொன்றது.

வரப்போகும் சமீப ஜீவ யுகத்திலே தோன்ற இருக்கும் உயிர் இனங்களுக்கு இடம் ஒழித்துக் கொடுத்தவைபோல அவை ஒழிந்தன! ஒழிந்தன. ஒழிந்தே போயின.