பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6



ஆறடி உயரத்திலே அடங்கியிருக்கிறான் மனிதன்! இவனுள்ளே யிருக்கிற விந்தைதான் என்ன?

இவன் எப்படித் தோன்றினான்?

பிள்ளைப் பிராயத்திலே இந்த உலகின் வனப்பிலே மனம் பறிகொடுத்தேன் நான். இதன் விந்தை பல கண்டேன்; வியந்தேன்.

எல்லாம் புதிராகத் தோன்றின. ஒன் றுமே விளங்கவில்லை. வியப்பினாலே கேள்விகள் பல கேட்டேன்.

சிறு வயதிலே ஒரு கிராமத்திலே வாழ்ந்தேன் கான். அந்தக் கிராமத்திலே ஒரு பள்ளிக்கூடம். அங்குச் சென்று படித்தேன்.

என் ஆசிரியருக்குக் காது கேளாது; செவிடு. ஆதலினாலே அந்தப் பள்ளிக் கூடத்துக்கும் செவிட்டு வாத்தியார் பள்ளிக் கூடம் என்ற பெயர் ஏற்பட்டது.

அவர் சொல்லிக் கொடுத்தது எதுவும் எனக்கு விளங்கவில்லை. நான் கேட்ட கேள்வி எதுவும் அவர் செவியில் ஏறவில்லை. செவிட்டு வாத்தியார் அல்லவா!

பெருக்கல் வாய்ப்பாடு சொல்லிக் கொடுப்பார் அவர். முந்திரி வாய்ப்பாடு,