பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

எல்லாம் மலர்களைச் சொரிந்தன. பூமியிலே முதன் முதலாக மலர்கள் தோன்றிய காலம் இதுவே.

புது யுகம்! புது யுகம்! எல்லா வகையிலும் புதுமை! சென்ற யுகங்களை விடப் புதிய வளர்ச்சி.

சென்ற யுகத்திலே இருந்த அசுரப் பிராணிகள் முட்டையிட்டன. அதன் பிறகு அவற்றிற்கும் அந்தமுட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கேயோ முட்டையிட்டு விட்டு எப்படியோ திரிந்து கொண்டிருந்தன அந்த மூர்க்கப் பிராணிகள். தன் இனம் என்ற அறிவு அவற்றிற்கு ஏற்படவில்லை. தன் குஞ்சு என்ற பாசம் 'மிருகஜன்மம்' என்பதற்கு மிகப் பொருத்தமானவை இவைகளே! சுருங்கச் சொன்னால் மூளை இல்லாத பிராணிகள் எனலாம்! மூளை இருந்தது. ஆனால் வளரவில்லை .

அந்த அசுரப் பிராணிகளுக்கு இன உணர்ச்சியே இல்லை. தன் இனம் என்ற உணர்ச்சி இல்லை.

ஒன்றை மற்றொன்று கண்டு விட்டால் போர் முழக்கம் செய்து கொண்டு தின்னத் தொடங்கின. சேர்ந்து வாழும் உணர்வே