பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

இன்றைய தினம் நிலத்திலே வசிக்கும் மிருகங்களிலே மிகப்பெரியது எது? யானை.

ஆனால் நான்கு கோடி ஆண்டுகள் முன்பு தோன்றிய யானையின் முன்னோர்கள் இவ்விதம் இல்லை. அவற்றிற்குத் துதிக்கை இல்லை.

அந்தக் காலத்து யானை, ஒரு பெரிய பன்றி போலத்தான் இருந்தது. பன்றி உயரமே! உரமான கால்கள் இல்லை. நீண்ட தந்தங்கள் இல்லை.

இப்படி இருந்த யானைதான் சிறிது சிறிதாக மாறியது. சிறிது சிறிதாகத் துதிக்கை நீண்டது. இப்படிப் பல தலைமுறைகள் சென்றன. கொஞ்சம் கொஞ்சமாக உருவம் பெருத்தது. பேருருவம் பெற் றது. கொம்புகளும் தோன்றின. ஒரு காலத்திலே யானை உடம்பு முழுவதும் ரோமம் அடர்ந்து இருந்தது!


18. மனித குமாரன் வருகை

மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வந்த இந்தப் பிராணிகள் சிறிது சிறிதாகச் சமவெளிப் பகுதிகளை நோக்கின; பயணம் தொடங்கின.