பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

அதன் பிறகு சுமார் 150 ஆண்டுகள் வரை எவருமே இது பற்றிச் சிந்திக்கவில்லை.

1838ம் ஆண்டிலே இரண்டு அறிஞர்கள் இது பற்றி ஆராய்ந்து சொன்னார்கள். அந்த இருவரிலே ஒருவர் பெயர் ஷிலிடன். இன்னொருவர் பெயர் ஷிவான்.

ஷிலிடன் தாவரங்களின் ‘ஸெல்' களை ஆராய்ந்தார். 'ஷிவான்' பிராணிகளின் 'ஸெல்' பற்றி ஆராய்ந்தார்.

இவ் விருவர்தம் ஆராய்ச்சி முடிவே 'ஸெல்' தீயரி எனப்படுவது.

‘ஸெல் தீயரி' என்ன சொல்கிறது? இந்த உலகத்தில் உள்ள உயிர் இனங்கள் எல்லாம் 'ஸெல்' லால் ஆனவை என்று சொல்கிறது. அது மட்டுமா? இல்லை. இந்த 'ஸெல்' எப்படி ஏற்பட்டது? ஒரு ஸெல்லிலிருந்து இன்னொரு ஸெல்! அதிலிருந்து மற்றொரு ஸெல்! இப்படியாக ஒன்றே பல ஆகின்றன என்றும் சொல்கிறது.

வீடு என்கிறோம். அது எதனால் கட்டப் படுகிறது? செங்கல்லினால். வீட்டுக்கு அடிப்படை செங்கல், லட்சக் கணக்கான செங்கல்களை இணைத்து இணைத்து வீடு கட்டி