பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

விடுகிறோம். இதே மாதிரி கோடிக்கணக்கான ஸெல்கள் இசைந்து மனித உருப் பெறுகின்றன; மாடாகின்றன. மரமாகின்றன. இன்னும் பல்வேறு உயிர் இனங்களாகக் காட்சித் தருகின்றன.

இந்த உண்மையைத்தான் அன்று திருமூலர் கண்டார். அது யூகம். யோகத்தால் ஏற்பட்டது. இன்று அறிவியல் சொல்கிறது. இது ஆராய்ச்சியில் கண்டது. விஞ்ஞான ரீதியில் ருசுப்பிக்கப்பட்டது.


21. கருவட்டம் அல்லது செல்

ஸெல் என்றால் கருக்கூடு எனலாம். கரு வட்டம் என்றும் சொல்லலாம். கருவட்டம் சிறியது; மிகச் சிறியது. ஒரு மயிர் இழை அளவில் பாதி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இந்தக் கருவட்டம் செய்கிற அற்புதமோ! மகத்தானது!! மகத் தானது!!!

கருவட்டம் ஒன்றை ஆராய்ந்து பார்த்தால் என்ன தெரிகிறது? சாயம் போட்ட