பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

22. ஒன்றே பல ஆகும் விந்தை!

கருவட்டம் 'ஒன்றே பல' ஆகும் விந்தையை இப்போது கவனிப்போம். கருவட்டத்துக்கு ஆறு விதமான பருவங்கள் உண்டு. ஆறாவது பருவத்தில் என்ன ஆகிறது? தனித்தனியே இரண்டு கருவட்டங்கள் தோன்றுகின்றன. எப்படி?

முதல் பருவம்: நுண்கருவிலிருந்து குரோமோசம் வெளிப்படுகிறது. மிதக்கிறது; கூத்தாடுகிறது. கூத்து! கூத்து! ஓயாத கூத்து! கதிர் போன்ற ஒன்று தோன்றுகிறது.

இரண்டாவது பருவம்: நுண்கருவைச் சுற்றியுள்ள வெங்காயத் தோல் மறைகிறது. குரோமோசம்கள் இரண்டு பகுதியாகப் பிரிகின்றன.

மூன்றாவது பருவம்: பிரிந்த குரோமோசம்கள் ஏற்கனவே தோன்றிய கதிருடன் ஒட்டுகின்றன.

நாலாவது பருவம்: கதிர் இரண்டாகப் பிரிகிறது. அவற்றுடன் குரோமோசம்களும் போகின்றன.