பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

புரட்சி செய்த

வாழ்த்தும், அவன் எழுதிய நாநாவுக்கு உலக இலக்கிய சிறப்பையும் தந்து போற்றினர்.

டிரைபஸ்

டிரைபஸ், பிரெஞ்சு நாட்டின் திறமை வாய்ந்த தளபதி, அவன் செய்த தவறு. அவன் ஒரு யூதனாகப் பிறந்தான் என்பது தான். தான் பிறந்த சமூகத்தாலே அவன் தளபதியாகவில்லை, திறமையாலே தளபதியானான். பிரெஞ்சு நாடு தொடுத்தப் பல போர்களில் வெற்றித் தேடித் தந்திருக்கிறான். போர் மேகங்கள் சூழும்போதெல்லாம் டிரைபஸ் என்ற பெயர் எங்கும் ஒலிக்கும். டிரைபஸ் தளபதியாக இருக்கும் வரை பிரெஞ்சை எதிர்ப்பது கடினம் என்றிருந்த நாடுகள் பல.

ஜெர்மனிக்கும் பிரெஞ்சுக்கும் போர் மூண்டபோது இவன் தன் முழுத் திறமையைக் காட்டினான். இவன் தளபதியாயிருந்த நேரம்தான், ஐரோப்பாவின் பெரும்பகுதி யூத எதிர்ப்பு இயக்கம் காட்டுத் தீப்போல் பரவியிருந்த நேரம். இந்த நிலையில் பிரெஞ்சுப் படைகளுக்கு ஒரு யூத டிரைபஸ் தளபதியாயிருப்பதா, கூடாது, கூடாது, கூடவே கூடாது. இவனைத் தீர்த்துக் கட்டியே தீரவேண்டும் என்ற பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது. இவ்வளவு சிறந்த போர் வீரன் மேல் சாதாரண பழி சுமத்திவிட முடியாது. அவ்வளவு சிறந்த செல்வாக்குப் பெற்றிருந்தான். இவனுக்கு ஒரு மரண அடி தரவேண்டும். சாகவும் கூடாது, எழுந்திருக்கவும் கூடாது. இதுதான் அவர்கள் திட்டம். இவன் இருந்த இராணுவ முகாமலேயே எஸ்டரெஸ் என்ற போர்வீரன் ஒருவன் இருந்தான். அவன் இவனுடைய கையெழுத்தை நன்றாயுணர்ந்தவனாகையால், பிரெஞ்சின் பீரங்கிப் படைகளின் இரகசியங்களை எழுதி கீழே டிரைபஸ் என்று கையெழுத்துப் போட்டு, ஜெர்மன் இராணுவ முகாமுக்கு அனுப்பிவிட்டான். ஜெர்மன் சிப்பாய்கள் வெறிக்கக் குடித்திருந்ததால் அதைப் படித்து துண்டுதுண்டாகக் கிழித்து குப்பைக் கூடையில் போட்டுவிட்டார்கள். இதை குப்பைக் கூட்டும் கிழவிக்கு