பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக மதங்கள்

T

இந்து மதம்

மிகப் பழைய நாகரிகம் இயற்கையின் உதவியால் அமைக்கப்பட்டது. நைல் நதிக்கரையில் மிக்க வல்லமை வாய்ந்த அரசு ஒன்று இருந்தது. யுப்ரடீஸ்-டைக்ரீஸ் என்ற இரு ஆம்ருேரங்களில் செமிடிக் என்ற இனத்தார் வாழ்ந்தனர். சிந்து சமவெளியில் மிகப் புராதனமான நாகரிகம் ஒன்று வளர்க்கப் பட்டது. அதை வளர்த்தவர்கள் ஆரியர் எனப்பட்டனர்.

மிகப்பழைய இந்து மதச் கோட்பாடுகளும் கொள்கைகளும் எழுதி வைக்கப்படாமல் மக்களின் நினைவாற்றல் மூலமே தலை முறை தலைமுறையாகக் காப்பாற்றப்பட்டு வந்தன. .

அவை கி. மு. 2900 மொஹஞ்சதாரோ காலம் முதல், இன்றைய காந்தியார் காலம் வரையில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆரியர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள் என்று கேட்கலாம். காஸ்பியன் கடல் பகுதியிலிருந்து வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. பாபிலோனியர்களை முந்திக் கொண்டு வேத ஆரியர்கள் சிந்து சமவெளிக்கு வந்தார்கள். அவர்கள் குடியேறியவர்கள்; உடல் வன்மை பெற்றவர்கள். வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் அனுபவித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள். முதலில் விவசாயம் செய்து, படிப்படியாக வட இந்தியாவில் சிறுசிறு ஆட்சியை அமைத்தார்கள். இவர்கள் ஆட்சி, பஞ்சாபிலிருந்து கங்கை சமவெ ளி வரையிலும் பரவி, பிறகு வடக்கே காசிமுதல் பீகா வரை ஆரியர்கள் ஆதிக்கத்தில் வந்தன.