பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

உலகைத் திருத்திய


சில நாட்கள் கழித்தபின் சீன நாட்டு அரசனிடமிருந்து நவநந்தர்களுக்கு ஒரு செய்தி வந்தது. அத்துடன் தேன் மெழுகினால் செய்யப்பட்டு, ஒரு கூண்டிலே அடைக்கப்பட்ட சிங்கம் ஒன்று வந்தது. “கூண்டைத் திறக்காமல் சிங்கத்தை வெளியேற்ற வேண்டும்” என்று அச்செய்தியில் கண்டிருந்தது.

நவநந்தர்கள் புத்திக்குச் சிங்கத்தை வெளியேற்றும் வழி தெரியவில்லை. சந்திரகுப்தன், கெளடில்யன் யோசனைப்படி ஒரு இரும்பைப் பழுக்கக் காய்ச்சி இழுத்தான். சிங்கம் உருகி வெளியே வந்துவிட்டது. சந்திரகுப்தன் தவிர மற்ற தொண்னுாற்று ஒன்பது பேரும் இருட்டறையிலேயே மாண்டனர்.

சனகன் மகன் சாணக்கியனைத் தனக்கு உதவியாகத் தேர்ந்தெடுத்ததே ஒரு வேடிக்கையான கதை: சாணக்கியன் நடந்து வரும்போது ஒரு கட்டைப் புல் அவன் காலைத் தடுக்கியது. அவ்வளவுதான். பெருஞ் சினம் கொண்டான். அக் கட்டைப் புல்லைப் பூமியிலிருந்து கல்வி எடுத்து, சின்னாபின்னமாக்கி எரித்த பின்பே அவன் கோபம் தணிந்தது.

அவனால்தான் நம் காரியம் முடியுமென்று எண்ணி, அரசர்கள் உட்கார்ந்து உணவுண்ணும் ஆசனத்திலே அமரச் செய்து உண்ணச் செய்தான்.

திடீரென நந்தர்கள் அங்கே வந்தனர். அறிஞர்களுக்கும் அரசர்களுக்கும் உரிய இடத்தில் ஒரு பரதேசிப் பிராமணச் சிறுவன் உட்கார்ந்திருத்தலைக் கண்டு மிகவும் கோபமுற்றவராய், தலைமயிரைப் பிடித்துக் கீழே தள்ளினர். சானக்கியன் வீராவேசத்துடன் எழுந்து நின்று, அவிழ்ந்த குடுமியை உருவிய வண்ணம் “இந்த நந்த வம்சத்தை அழிக்கும் வரையில் அவிழ்ந்திருக்கும் என் தலை முடியை முடிய மாட்டேன்” என்று உறுதி எடுத்துக்கொண்டான். அதன் பிறகுதான் அண்டை நாட்டு அரசனைக் கொண்டு நவநந்தர்களை அழித்தான்.

குடுமியை உருவியவாறே, “மதயானையின் உதிரத்தைப் பருகிப் பருகி, மாலை மதியின் கலையைப்போல் சிவந்து விளங்கும் சிங்கத்தின் கோரப் பல்லை, அது கொட்டாவி விடும் சமயம்