பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள்

109

பார்த்து, அதன் வாயிலேயே கையை விட்டு பறிக்க நினைக்கிறவன் எவன்?

சினத் தீயின் கரிய பெரிய புகைக் கொடியான எனது சிகை, நந்தர்கள் மரபுக்குக் கருநாகம் போன்றது.

நந்தர் எனும் காட்டுக்குத் தூமகேது போன்று என் சினத் தீயின் கொழுந்து சுடர்விட்டு எரிகின்றது. அறிவற்ற எந்த முடன் அதைக் கடந்து என் வெகுளி விளக்கில் விட்டில் போல் விழுந்து விநாசத்தைத் தேடிக்கொள்ள விரும்புகிறான்” என்று சிகையைக் கட்டிக் கொண்டான்.

இவனை முதல் முதலில் அறிமுகப்படுத்திவிட்டு மேலே செல்வோம். கேரளத்திலிருந்து வடநாடு சென்ற ஒரு பார்ப்பனன் அவன் என்று தெரிகிறது. இவன் பல நூல்களை எழுதியிருந்தாலும், முத்ராராட்சசம் என்ற நூலே மிகச் சிறந்தது என்பது பொதுவான எண்ணம். அரசியல் தெளிவிலும் சூழ்ச்சியிலும் மன்னர்களை மயக்குவதிலும் கைதேர்ந்தவன்.

மெளரிய அரச பரம்பரையில் நவநந்தர்களுக்கு வரவேண்டிய அரசுரிமையைச் சந்திரகுப்தனுக்கு ஆக்கித் தந்தவன் இவன். இதற்காக இவன் கையாண்ட முறை வேடிக்கையானது.

சீனத்திலிருந்து கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம் ஒன்றை அனுப்பியிருந்தனர். அதைக் காட்டிக் கூண்டின் கதவைத் திறக்காமல் எவன் சிங்கத்தை வெளியே கொண்டு வருகிறானோ அவனுக்கே அரசுரிமை என்றான். நந்தர்கள் திகைத்தனர். சந்திரகுப்தன் சிங்கத்தை வெளியே கொண்டு வந்துவிட்டான். சந்திரகுப்தனுக்கு எப்படி சிங்கத்தை வெளியே கொண்டு வருவது என்பதைச் சொல்லி வைத்திருந்தான் சாணக்கியன். அதாவது அந்தச் சிங்கம் உண்மையான சிங்கம் அல்ல. மெழுகால் செய்யப்பட்ட சிங்கம். ஒரு இரும்பைப் பழுக்கக் காய்ச்சி சிங்கத்தின் மேல் இழு. சிங்கம் கரைந்து வெளியே ஓடி வந்துவிடும் என்று சொல்லி வைத்திருந்தான். அதன்படி