பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள்

113

கள் வழக்குகளை ஒழுங்காக நடத்த நீதிமன்றங்களுக்கு வந்தாலும் வருவார்கள். இல்லையானாலும், வழக்குத் தொடுத்தவர்கள் வக்கீல்களை நீதிமன்றங்களுக்கு அழைத்து வருவார்களா? அதுவுமில்லை. வாணிபக் கடைகளில் சாக்குகள் இருக்கும்; முதலாளி தூங்குவான்-பணியாட்களும் அப்படியே. எங்கே படுப்பது என்றறியாமல், வீடுகள் இருந்தும் தெரு ஓரங்களிலே படுத்திருப்பார்கள். பெண்களும் அப்படியே. பள்ளியில் ஆசிரியர் நாற்காலியில் சாய்ந்தபடியே தூங்குவார். மாணவர்கள் இங்கு மங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். பாடங்கள் நடைபெறாது. இவ்வளவும் எதனால்? அபினியின் போதையால்.

அபினி எங்கே கிடைத்தது?

இந்த அபினி சீனத்தில் செய்யப்படவில்லை. இந்தியநாட்டு கல்கத்தாவிலிருந்து கிளிப்பர் ஆப் சைனா என்ற கப்பல்கள் புறப்படுகின்றன. அவற்றில்தான் இந்தப் பொல்லாத அபினி ஏற்றப்பட்டு புறப்படுகின்றன. இதையறிந்த மன்னன் சின்-யுவான்கே என்பவன்தான் இதைத் தடை செய்துவிட்டான். அதன் பிறகும் கள்ளத்தனமாக சென்றது. அப்படிச் சென்ற கப்பலிருந்து பெட்டிகளைக் கடலில் எறிந்தான். அன்றிலிருந்து தான் கறுப்பு வாணிபம், கள்ள வாணிபம் என்ற பெயர் பெற்றது. நாட்டையும் கவனிக்காமல், சொந்த வாழ்க்கை, வாணிபம் என்ற எதையும் கவனிக்காமல் சதா அபினியைத் தின்றுகொண்டிருந்த மக்களைத் தட்டியெழுப்புவதென்பது அவ்வளவு எளிதான செயலா?

மஞ்சு அரசாங்கத்தைக் கவிழ்த்து, குடியரசை நிறுவிய மாவீரன் சன்யாட்சன். மரணப்படுக்கையிலே சொன்ன சில வார்த்தைகள் நாமே நேரில் கேட்பதைப் போன்றிருக்கின்றன.

“நான் உடுத்துவதற்காக வைத்திருந்த இரண்டு அங்கிகளை என் மனைவிக்குத் தந்துவிட்டுச் செல்கின்றேன். இவை அவளுக்கு சொத்தாக அல்ல, என் நினைவுப்பொருளாக என்கிறான் சன். சீனத்தின் முதல் குடியரசுத்தலைவன் அவன் தான். அவன் நினைத்திருந்தால் எவ்வளவோ பொருள் ஈட்டி”