பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள்

115

அங்குலம் கூட இடம் வைக்காமல் தன் முழு மனதையும் பொது நலத்தின் நுழைவிடமாய் வைத்ததாலே மக்களால் மகாத்மாக்கள் என்று பாராட்டப்பட்டார்கள். பெற்ற தாய் தந்தையர்களின் பேச்சைக் கேட்காதவர்கள்கூட இந்த விடுதலைவீரர்களின் பேச்சுக்கு அடிபணிந்தார்கள். அவர்கள் இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு செல்லரித்த ஏகாதிபத்தியங்கள் இருந்த இடம் தெரியாமல் அந்தக் கோட்டைகளை மண் மேடாக்கிப் புல்பூண்டு முளைக்காமல் செய்துவிட்டார்கள்.

மகான் கன்பூஷியஸ் பிறந்த இடம்-கவி லீபோ பிறந்த இடம். மஞ்சு அரச பரம்பரையினரால் எதிரிகள் படையெடுத்து வருவதைத் தடுக்கும் பொருட்டு 1400 மைல்கள் நெடுஞ்சுவர் கட்டிக் காத்த சீனம், உலக அதிசயங்களில் இதுவும் ஒன்றாக வைத்துப் பேசப்படுகிறது.

“அறிவுடையவர் எப்போதுமே தங்கள் அறிவுடையவர்கள் என்று சொல்லிக்கொள்ள மாட்டர்கள்”

“நான் ஒரு திறமைசாலி என்று நீ சொல்லிக்கொள்கிற போது, உனக்குப் பின்னாலேயே பத்து திறமைசாலிகள் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது உன் நினைவிருக்கட்டும்”

எங்கோ ஒரு மூலையில் புரட்சி வாடை வீசினாலும், அரசர்கள் எவ்வளவு திடுக்கிடுகிறார்கள் என்பது சன்யாட்சன்னின் வாழ்க்கையில் எவ்வளவு உண்மையாயிருக்கிற தென்பதைக் கவனிப்போம்

“இவன் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ஒரு லட்சம் பவுன் வெகுமதி” இப்படி மஞ்சு சர்க்காரின் அறிவிப்பு. சன் யாட் சென் ஒரு கூலியின் மகன். இவனும் ஒரு கூலி. அவன் புரட்சியைத் தொடங்கும் போது கூவியாக இல்லை. படித்துப் பட்டம் பெற்ற, இரணசிகிச்சை செய்வதில் நிபுணன் என்ற பெயரெடுத்த உயர்ந்த மருத்துவனாக இருந்தான். மஞ்சு சர்க்காரின் அறிவிப்பைக் கண்டு பணத்துக்காசைப்பட்டு இவனைக் காட்டிக்கொடுக்க யாரும் முன்வரவில்லை. அவ்வளவு கேவலமான நிலையில் அன்றைய சீன மக்கள் தயாராயிருக்கவில்லை.