பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

உலகைத் திருத்திய

இவன் பெயர் மாற்றமடையாமலே ஊர் மக்கள் பழையபடி இவனை சன்வென் என்றே அழைத்தார்கள்.

மீண்டும் மனைவியோடு ஹாங்காங் போய் ஹாக்கரோடு சேர்ந்து கொண்டு ஊர்ஊராக, கிராமம் கிராமமாக மதப் பிரசாரத்துக்குப் போய்க் கொண்டேயிருந்தான். அவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு தன் ஊருக்கே வந்து தன் வீட்டிலேயே தங்கவைத்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தான். இவனுடைய பணிவையும் அன்பையும் கண்டு இவன் போகின்ற வரையில் யாரும் எதுவும் பேசவில்லை.

தாயார் கவலை

இதையெல்லாம் கண்ட தாய் நடந்தவைகளையெல்லாம் பெரிய மகன் ஆமிக்கு எழுதிவிட்டாள். கடுங்கோபங் கொண்டான் ஆமி. அவன் கிருஸ்துவ மதத்திலிருந்து திரும்பாவிட்டால் குடும்பச் செலவுக்குப் பணம் அனுப்புவதை நிறுத்தி விடுவேன் என்று பயமுறுத்திப் பார்த்தான் ஆமி. ஆனாலும் சன் அசையவில்லை. கடைசியில் தன் சொத்துக்கள் சிலவற்றை விற்கவேண்டும். அதற்கு சன்னின் கையெழுத்துத் தேவைப்படுகிறது. ஆகவே, அவனை உடனே ஹனலூலுவுக்கு அனுப்புங்கள் என்றெழுதினான். சன் அனுப்பப்பட்டான். ஆமி எவ்வளவோ சொல்லிப் பார்த்தான், கேட்கவில்லை. சுடைசியில், ஊர்போய்ச்சேர கப்பல் கட்டணமும் தரமுடியாதென்று சொல்லி, வெறுங்கையோடு அனுப்பிவிட்டான். அங்கிருந்த சில கிருஸ்தவ நண்பர்கள் உதவி பெற்று ஊர் வந்து சேர்ந்தான். மீண்டும் க்வீன்ஸ் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஏனெனில் இடையிலே பல திங்கள்கள் நின்று விட்டதால் ஏற்பட்ட கதி.

அப்போது சீனத்தில் மருத்துவத் தொழிலுக்கு நல்ல வாய்ப்பிருந்தது. ஆகையால் டாக்டர் கெர் என்பவரின் யோசனைப்படி மருத்துவத் தொழிலுக்குப் படிப்பதற்காக ஹாக்கரின் அறிமுகக் கடிதத்தோடு காண்டனிலிருந்து