பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள்

123

டாக்டர் கெர்ரைச் சந்தித்தான். அவர் சில சீன மாணவர்களுக்கு மருத்துவத் தொழிலுக்கேற்ற பாடத்தை சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அங்கே போய்ச் சேர்ந்தான் சன்.

இந்த நேரம் ஹாங்காங்கில் ஒரு மருத்துவக் கல்லூரி சர் பாட்ரிக் மான்சன் என்பவனால் திறக்கப்பட்டது. டாக்டர் காண்ட்லின் உதவியால் சன் அதில் ஒரு மாணாக்கனாகச் சேர்ந்துகொண்டான்.

கல்லூரியில் சேர்ந்த இருபத்திநான்கு பேரில் சன் நல்ல திறமைசாலி. இனிய சுபாவம். படிப்பில் அவன் காட்டிய ஆர்வம் வாழ்க்கையில் காட்டிய பெருந்தன்மை ஆகிய குணங்கள் காண்ட்லியைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. காண்ட்லி மருத்துவக் கல்லூரியின் ஆசிரியர். 1891ம் ஆண்டு இவனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சன்போ என்று பெயரிட்டார்கள். பிற்காலத்தில் அவன் காண்டன் மேயராகவும், சியாங்-கே-ஷேக் அமைச்சரவையில் ஒரு அமைச்சராகவும் பணி புரிந்திருக்கின்றான். சன் மருத்துவக் கல்லூரியில் படுத்துக்கொண்டே பிற நாட்டு வரலாறுகளைப் படித்துக்கொண்டு வந்ததில், அந்நாடுகள் சிலவற்றைப் பற்றிப் படித்ததின் விளைவாக, மஞ்சு சர்க்காரைப் பகிரங்கமாக தாக்கிப் பேசவும் அறிக்கைகள் விடவும் செய்தான்.

1892ல் சன் டாக்டர் பட்டம் பெற்றுவிட்டான். இனி தொழில் நடத்துவது எங்கே என்று எண்ணி தன் சொந்த ஊருக்கருகாமையிலிருப்பது நல்லதென்று மாக்கோ என்ற சிறிய தீவைத் தேர்ந்தெடுத்து அங்கு தொழிலைத் தொடங்கினான். ஆனால், அந்தத் தீவு போர்ச்சுகீசியருக்குச் சொந்தமாயிருந்ததால் இவன் வளர்ச்சியை ஒப்புக்கொள்ளாமல், பேர்சுகீசிய டாக்டர்கள் தவிர வேறுயாரும் இங்கே தொழில் செய்யக்கூடாதென்று அரசாங்க உத்திரவைக் காட்டித் தடுத்துவிட்டார்கள். எப்படியும் சன் மாக்கோ தீவை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. எங்கே செல்வது? போர்ச்சுகீசிய