பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

11

உண்டாக்கப்பட்டதுதான் இந்து மதம் என்று திட்டவட்டமாகச் சொல்லலாம்; இஸ்லாம் மதத்தைப் பலர் தழுவியதற்கும், கிருத்துவ மதத்தைத் தழுவியதற்கும் இவர்கள் செய்த கொடுமைதான் காரணம் என்றால் மிகையாகாது. இன்னும் இந்தக் கொடுமைகள் ஒழியாமல் தஞ்சை போன்ற சில மாவட்டங்களில் இருக்கக் காண்கிறோம்.

இந்து மதக் கடவுள் யார்? என்றால் முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பெத்தெண்ணாயிரம் ரிஷிகள், பட்ச கின்னர கிம்புருடர் என்கின்றனர். இந்து மதக் கடவுள் செய்த லீலைகளால் மக்களின் பொது ஒழுக்கம் வளரவில்லை; மாறாகக் கெட்டுவிட்டது. கோயில்களில் செதுக்கி வைத்திருக்கிற சிற்பங்கள் காணச் சகிக்கக்கூடியதாயில்லை. இதுதான் இந்து மதம்.

கீதை

மகாபாரதத்தில் போர்க்காலத்தில் எதிரில் நிற்கும் பாட்டனையும், பங்காளியையும் கொல்ல அஞ்சுகிறான் அர்ச்சுனன். அவன் தேரை ஓட்டுகிறான் கண்ணன். “ஏன் மயங்குகிறாய் அர்ச்சுனா, வில்லை எடு, நாணேற்று, அம்பைத் தொடு, அவர்களைக் குறி வைத்துவிடு. நீ அவர்களைக் கொல்வதாக நினைத்துப் பயப்படுகிறாய். நீ அவர்களைக் கொல்ல முடியாது. ஆன்மா அழிவற்றது. அவர்கள் உடலைத்தான் நீ வீழ்த்த முடியும், கொல்லு” என்றான். கண்ணன் சொன்னபடி அருச்சுனன் செய்தான்; பாரதப்போர் முடிந்தது.

இதையே உதாரணமாக வைத்துக் கொண்டு, ஒரு கொலைக்காரனுக்காக வாதாடும் வழக்கறிஞர், “நீதிபதியவர்களே, எவன் இந்த வழக்கில் கொலைகாரனாக நிற்கிறானே அவனுக்காக ஆஜராயிருக்கின்றேன். தாங்கள் பகவத் கீதையைப் படித்திருப்பீர்கள். அதில் அர்ச்சுனனால் அம்பெய்யப்பட்ட எதிரிகளின் ஆன்மாவுக்கு அழிவில்லை. உடலுக்குத் தான் அழிவு என்று கண்ணன் சொன்னதைத் தாங்கள் படித்