பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

உலகைத் திருத்திய

கள். இதைக் கண்டதும் சில நண்பர்களின் உதவியால் ஹாங்காங் வந்து சேர்ந்தான். இவன் இங்கே இருப்பது சரியல்ல என்று நண்பன் காண்டலிமூலம் தெரிந்துகொண்டு, அங்கிருந்து ஜப்பானிலுள்ள கோப் நகரமடைந்தான். ஜப்பான் சென்றதும் தலைமயிரை நீக்கிவிட்டு ஒரு ஜப்பானியனைப் போல் உடை உடுத்திக்கொண்டான். அங்கேயும் அதிக நாட்கள் தங்கவில்லை. சீன அரசாங்க ஒற்றர்கள் இவனைக் கண்டுபிடித்துத் தன் நாட்டுக்கு அனுப்பும்படிக் கேட்டால், சர்வதேச ஒப்பந்தப்படி இவனை அனுப்பித் தீரவேண்டும். ஆகையால் முன்பு இவன் நினைத்திருந்தபடியே அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகரத்துக்குச் சென்றான் அங்கிருந்த சில சீனர்களைச் சந்தித்து தன் இலட்சியங்களைச் சொல்லி அவன் வசம் திருப்பப் பார்த்தான். நினைத்தபடி பலன் ஏதும் கிடைக்கவில்லை. மறுபடியும் அங்கிருந்து புறப்பட்டு வழி நெடுகிலுமிருந்த பல ஊர்களைப் பார்த்துக்கொண்டே நியூயார்க் நகரம் வந்து சேர்ந்தான். இவன் சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் இருந்தபோது புகைப்படம் எடுத்துக்கொண்டான். இது எப்படியோ வாஷிங்டனிலிருந்த சீனப் பிரதிநிதி கையில் கிடைத்தது. இதனால் இந்த புகைப்படத்தைக் கொண்டு இவனை தீவிரமாகத் தேடத் தொடங்கினர். இதற்குள் இவன் அமெரிக்காவை விட்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லிவர்பூலுக்கு வந்து விட்டான். இங்கே இரண்டு நாட்கள் தங்கி, நேராக லண்டனுக்கு வந்து சேர்ந்தான். ஓய்வு பெற்று அங்கே தங்கியிருந்த இவனுடைய தோழன் காண்டலியைக் கண்டுபிடித்து அங்கு போவதும் வருவதுமாக இருந்தான். ஒருநாள் அகப்பட்டுக்கொண்டான். சிறையில் தள்ளிவிட்டனர். இதைக் காண்ட்லிக்குத் தெரிவிக்க வேண்டுமென விரும்பி ஒரு சீட்டெழுதி, அதில் தங்க நானயத்தை வைத்து தெருவில் வீசினான்.

இவனைச் சிறையில் பாதுகாத்த கோல் என்ற வெள்ளையன் தன் மனைவி ஹோவ் என்பவள் மூலம் காண்டலி தம்பதிகளிடம் சேர்த்துவிட்டான். இதைக் கண்டதும் காண்ட்லி தம்பதிகளுக்கு என்ன செய்வதென்றே புரியாமல் திகைத்தனர்.