பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

உலகைத் திருத்திய

தாலே பாம்பெனச் சீறுவாள். ஆனால் சீர்திருத்தக் கருத்துக்கள், மெதுவாக அரச அதிகாரிகளால் இவன் உள்ளத்தில் புகுத்தப்பட்டன. ஆகையால், தொழில்களையெல்லாம் விஞ்ஞான ரீதியில் அமைக்கவேண்டுமென்றும், கோயில்கள் இருக்கின்ற இடங்களிலே எல்லாம் பள்ளிகள் அமைக்கவேண்டுமென்றும் மாற்றங்கள் செய்யத் தொடங்கினான். இதையறிந்த ரீஜண்டாயிருந்தவள் மன்னனுக்கு ஓய்வு தேவை என்று மெதுவாக அவனை ஒரு கப்பலிலேற்றி அனுப்பிவிட்டு, மீண்டும் ஆட்சிக்கு வந்து பலரைச் சிறைப் பிடித்தாள். சிரச்சேதம் செய்தாள். தன்னுடைய எழுபதாவது நாளைக் கொண்டாட வேண்டுமென்று நாட்டுக்கு உத்திரவிட்டு, அதன் நினைவாகச் சிறையிலிருந்த பலரை விடுதலை செய்தாள். இன்னும் சன் சிறையில் தான் இருந்தான். அவனை விடுவிக்கவே இல்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் இந்த முற்போக்கு சக்திகள் தன்னைத் தாக்கும் என்று இவள் அறியாதவளல்ல. அதனால் கொஞ்சம் நிதானமாகப் போனாளென்றாலும், மன்னனை பாதுகாப்புக் கைதியாகத்தான் நடத்தி வந்தாள். பாக்சர்கள் என்றழைக்கப்பட்டவர்களால் உலகப் புகழ் பெற்ற மார்ஸ் கலகம் நடந்தது. இப்போதெல்லாம் சன் இங்கே இல்லை.

லண்டன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான். இரு வல்லரசுகளுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பேரில், அதாவது சன் விடுதலைபெற்றபின், பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்டிருக்கும் எந்த பகுதியிலேயும் சன்னுக்கு இடத் தரக்கூடாது என்பது தான் அந்த ஒப்பந்தம். ஆகவே, லண்டனிலேயே சில நாட்கள் தங்கி, அன்றாடம் நூல் நிலையத்துக்குப் போய் புரட்சிக்கான திட்டங்களையெல்லாம் தெரிந்துகொண்டு, எந்த லண்டனில் ஏழைகள் பணக்காரர்கள் என்ற பேதங்கள் இருக்காதென்று நினைத்தானோ, அதே பேதாபேதங்கள் அங்கேயும் இருப்பதைத் தெரிந்துகொண்டு, வெதும்பிய மனதோடு ஹாங்காங் செல்வதற்குக் கப்பலேறினான். அங்கே இவனை கப்பலிலிருந்து இறங்க அனுமதிக்கவில்லை, ஏற்கெனவே இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி. ஆகையால் கப்பல் ஜப்பானுக்கு