பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள்

131

திருப்பிவிடப்பட்டது. அங்கு வருவதும் சன்னுக்கு ஆறுதலாயிருந்தது. ஏனெனில், ஏற்கெனவே கொரியா சம்பந்தமாக ஏற்பட்ட போரின் விளைவாக இரு நாடுகளுக்கும் இப்படி ஒரு ஒப்பந்தமுமில்லை. ஆகவே, சன் ஜப்பான் போவது நன்மையாயிற்று. நேராக பார்மோசா தீவுக்குப் போனான். இது முன்பு சீனாவிடமிருந்தது. ஒரு போர் ஒப்பந்தத்தின் மூலம் இது ஜப்பான் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. சன் அங்கு வந்ததையறிந்த அதிகாரிகள், இவனுக்கு வேண்டிய உதவிகளை அளிப்பதாக வாக்குறுதியளித்திருந்தார்கள். அதன்படியே செய்தும் வந்தார்கள். பார்மோசா 13,900 சதுர மைல் கொண்டது. இங்கே கற்பூரம் உற்பத்தி. இதற்கு தைவான் என்று மற்றாெரு பெயரும் உண்டு. இதனால் ஜப்பானியர் கொடுத்த உதவியைக் கொண்டு சீனத்தின் கடலோரப் பகுதிகளில் தாக்கிக் கொண்டிருந்தார்கள். பொருளுதவியும் வந்துகொண்டிருந்தது. ஆனால் அந்த உதவிகள் எல்லாம் திடீரென நின்றுவிட்டது. காரணம் இதுவரை ஆண்டுகொண்டிருந்த லிபரல் கட்சி தேர்தலில் தோல்வியுற்று கன்ஸர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன். சென்னுக்கோ அவர் நடத்தவிருக்கும் புரட்சிக்கோ எந்தவிதமான ஆதரவும் தரக்கூடாது என்று கட்டளையிட்டதால் எல்லாம் நிறுத்தப்பட்டது. ஆகையால் சன் தொடங்கிய இரண்டாவது புரட்சியும் தோல்வியுற்றது. இந்த செய்தியை யாமோடா மூலம் சொல்லியனுப்பினான். இவன் மூலம் செய்தியறிந்த செங்ஹியாங் படைகளைக் கலைத்துவிட்டான். ஆனால் மஞ்சு அரசாங்கம் யமொடாவைக் கண்டுபிடித்து சிரச்சேதம் செய்துவிட்டனர். புரட்சிக்கு முதல் பலியானவன் இவன்தான், பியாங்ஹோ என்பவனும் புரட்சி நடத்த மற்றொரு பகுதிக்கு அனுப்பப்பட்டவன். அவனும் ஏமாற்றமடைந்து, ஏதாவது ஒரு அதிர்ச்சியையாவது தரவேண்டுமென்று கருதி, காண்டனிலிருந்த மஞ்சு அரசப் பிரதிநிதி இருந்த மாளிகை மேல் குண்டு வைத்துத் தாக்க எண்ணினான் அந்த முயற்சி கைகூடு முன்னே கைது செய்யப்பட்டு சிரத் சேதம் செய்யப்பட்டான். இவன் புரட்சிக்கு இரண்டாவது பலி. சன் துக்கித்தான். இந்த இரண்டாவது தோல்விக்குப் பிறகு எங்கெங்கோ சுற்றி கடைசி