பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

உலகைத் திருத்திய

யில் ஜப்பான் வந்து சேர்ந்தான். அதுதான் இவனுக்கு அடைக்கலம் தந்தது. யோகஹாமா என்ற நகரத்தில் ஓர் இடத்தைப் பிடித்து அதைத் தன் இருப்பிடம் ஆகவும் அலுவலகமாகவும் அமைத்துக்கொண்டான். 1895ல் ஒரு முறை, 1900ல் ஒரு முறை, 1907ல் நான்கு தடவைகள், 1908ல் இரண்டு தடவைகள், 1910ல் ஒரு தடவை, 1911 மார்ச்சு திங்களில் ஒரு தடவை ஆக தோல்வியடைந்த புரட்சிகள் பத்து, பதினோராவது புரட்சி தான் வெற்றியடையப் போகிறது. அங்கே இவன் தன் பெயரை நகயாமா என்று வைத்துக்கொண்டு, தன்னை யாரும் கண்டுகொள்ளாதபடி பல இருட்டறைகளுக்கு அப்பால் ஒரு இருட்டரையில் வசித்தான்.

இவனைக் காண ஒரு அமெரிக்கன் வந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, “புரட்சி செய்ய வேண்டியது தேவை தானா? படிப்படியாக சீர்திருத்திப் பிறகு இந்த முடிவுக்கு வரலாமே? என்றான். அப்படி செய்ய மஞ்சு மன்னனுக்கு சக்தியில்லை. நீங்கள் கொண்டிருக்கிற ஆசை மிகப்பெரியது” என்றான் அமெரிக்கன். “ஆம். மகத்தானதுதான்; அதை நிறைவேற்றுவதற்கு உயிரையும் கொடுக்கலாமே” என்றான் சன். அங்கிருந்து கொண்டே பிரிட்டிஷ் அரசாங்க ஆளுகைக்கு உட்பட்ட லேயா தீபகற்பம், ஜோஹோர், கெட்டா, கெலாண்டான், நெங்ரி செம்பியான், மஹாங், பேராக், பேரீஸ், கொங்கோர், டிரெங்கானு, மலாக்கா, பினாங்கு போன்ற சிறுசிறு நாடுகள், 1957ம் ஆண்டு ஆகஸ்டு 31ம் நாள் சுதந்திர நாடுகளாய்விட்டன. மலேயாவை ஒட்டியுள்ள சிங்கப்பூர் தீவு, 1946ல் தனி நாடாய் விட்டது.

இந்தோ சீனா, கம்போடியா, லாவோஸ், தெற்கு வியட்னாம், வட வியட்நாம் என்ற தனித்தனி நாடுகளே முன்பு இந்தோ-சீனா என்று பொதுவாக அழைக்கப்பட்டது. இவற்றைக் குறிப்பிடுவதற்குக் காரணம் இங்கெல்லாம் சுற்றி தன் நோக்கத்திற்கு ஆட்களைத் திரட்டினான். சீனாவுக்குள்ளே மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டு இலங்கைச் சாமான்களை விற்பவன்போல், ஏழைக் குடியானவனைப்போல், ஜப்பானியனை