பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

உலகைத் திருத்திய


ஐரோப்பாவில் பல நகரங்களில் கிளைகளை அமைத்து, போதிய பணமும் சேர்த்துக்கொண்டு சூயஸ் கால்வாய் வழியாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தான். இவன் நிகழ்த்திய எல்லா சொற்பொழிவுகளுக்கும் அதிகமான கூட்டம் சேர்ந்தது டோக்கியோவில்தான்! அங்கே டுங் மெய்யூவி என்ற சங்கத்தை நிறுவினான். அதில் சேருகிறவர்கள் மரண தண்டனையென்றாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று கடவுளறியச் சொல்ல வேண்டும். அந்த சங்கத்தின் குறிக்கோள்களாவன:

1. ஊழல் நிறைந்த மஞ்சு ஆட்சியை விழுத்துவது;

2. குடியரசு நிறுவுவது;

3. உலகத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவது;

4. விவசாய நிலங்களை நியாயமான முறையில் பங்கிடுவது;

5. சீனாவும் ஜப்பானும் ஒத்துழைக்க வேண்டுமென்ற கொள்கையை ஆதரிப்பது.

6. சீனாவின் மேம்பாட்டுக்காக உலகத்திலுள்ள எல்லா நாடுகளின் உதவியையும் நாடுவது.

சீனாவில் எப்போதுமே நாடகங்களுக்கு அதிக மதிப்பு. அந்த முறையிலும் கொள்கைகளைப் பரப்பினான். பிறகு ரகசியமாக சன்போ என்ற பத்திரிகை தொடங்கப்பட்டது. இரண்டாயிரம் பிரதிகள் சீனாவிலும், ஆயிரம் பிரதிகள் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டன.

கன்வென்ஷன்கள்

சீனாவின் பல நகரங்களில் வேறு நாட்டார் வாழ்வதுண்டு. அவர்களை சீன சட்டம் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் தன்னிசையாக வாழலாம். காரணம், அவர்கள் தாய்நாட்டு பாங்கிகளிலிருந்து மஞ்சு அரசாங்கம் ஏராளமான பணம் கடனாகப்பெற்றிருந்தது. இந்த மாதிரியான மாகாணங்களில் ஒன்று ஹுப்போவில் உள்ள ஹாங்கோ. அங்கே புரட்சிவாதிகள்