பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள்

135

ஒரு இடத்தைம் பிடித்து, வெடிகுண்டுகள், இரகசிய தஸ்தா வேஜுகள், உறுப்பினர் பட்டியல் ஆகியவை வைத்திருந்தார்கள். தற்செயலாக அவற்றை ரஷ்ய போலீஸார் கைப்பற்றினர். இவற்றை பக்கத்து மஞ்சு அரசாங்கப் பிரதிநிதிக்கு அனுப்புவதற்குள்ளாக புரட்சிப்படையினர் அரசப் பிரதிநிதியின் பாளிகையைத் தாக்கினார்கள். அதிலிருந்தவர்கள் ஊகங்க் நகரத்திற்குள் தப்பியோடி விட்டனர். அந்த மாளிகையிலிருந்த யுத்த தளவாடங்கள் முதலியவை புரட்சிப்படையிடம் சிக்கின. இப்படி நகரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக புரட்சிப் படையிடம் விழுவதை வெளிநாடுகளில் தலைமறைவாகத் திரிந்துகொண்டிருக்கும் சன்னுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் சன் போட்ட மாறுவேடங்கள் எத்தனை! ஒரு ஆற்றின் இந்தப் பகுதி கன்வென்ஷன் வசம். எதிர்க்கரையிலுள்ள பகுதி மஞ்சு அரசாங்கத்துடையது. ஓடத்தில் கடக்கவேண்டும். சன்னும் தோழனும் படகில் ஏறிக்கொண்டார்கள். அங்கே பெண்களே படகோட்டிகளாக இருந்தார்கள். அவர்கள் மாற்றியணிவதற்காக வைத்திருந்த உடைகளை பணம் கொடுத்து வாங்கி, படகு அந்தக் கரை சேருவதற்குள்ளாக பெண் வேடம் போட்டுக் கொண்டு, ஜெபம் நடந்து கொண்டிருந்த மாதா கோயிலில் பெண்கள் பகுதியில் போய் உட்கார்ந்து கொண்டார்கள். இப்படியே பல வேடங்களில் பல ஊர்களில் சுற்றிக்கொண்டிருந்தான். கடைசியில் லண்டன் நகரம் வந்தான். அங்கே இவன் நண்பன் காண்ட்லியின் வீட்டுக்குப் போனான். அங்கே ஏராளமான தந்திகள் இவன் பேருக்கு வந்திருந்தன. அதில் ஒரு தந்தி “நீ குடியரசுத் தலைவனாவதற்குத் தயாராயிரு” என்பது. பல ஊர்களில், நகரங்களில் புரட்சிப்படையும் இராணுவப் படையும் ஒன்றாய் சேர்ந்தன. அதற்குக் காரணமே மஞ்சுப் படையின் தலைவனை, நள்ளிரவில் அவனைத் தேடும்போது, தன்னைக் கொல்லத்தான் வருகிறார்கள் என்று பயந்து கட்டிலுக்கடியில் ஒளிந்துகொண்டவனை வெளியே