பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள்

137

தவன் அறிக்கை மேல் அறிக்கைகள் விட்டான். என்றாலும் அது மக்களிடையே எடுபடவில்லை.

யுவான் ஷிகாய் என்பவன் ஒரு சுயநலவாதி. இவன் மஞ்சு அரசாங்கத்தையும் விரும்பவில்லை. புரட்சி அரசாங்கத்தையும் விரும்பவில்லை. தானே தலைவன் ஆகவேண்டுமென்ற எண்ணத்தில் புரட்சிவாதிகளை சமரசம் செய்வதாகச் சாக்கு சொல்லி பலரைக் கொன்றான். அதுவும் பயனற்றுப் போய்விட்டது.

இதற்கிடையில் தெற்கு சீனத்தில் தலைநகரம் நான்சிங் நகரத்தில் புரட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி தற்காலிக சர்க்காரை நிறுவி, சன் தாயகம் திரும்புகிறவரையிலும் இராணுவமன்றமும், அதன் பிறகு குடியரசு முறையில் அமைப்பதென்றும் தற்காலிகத் தலைவனாக சன்-யாட்-சென் நியமிப்பதென்றும் அறிக்கை வெளியிட்டார்கள்.

இதை உலகுக்கெல்லாம் அறிவித்துவிட்டார்கள்.

சன் திரும்புகிறான்

சன் லண்டனிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வந்ததும், மக்கள் மலர் தூவி வரவேற்றார்கள். அங்கு இரண்டு நாட்கள் தங்கிவிட்டு ஷாங்காய் நகரம் வந்து சேர்ந்தான் சன். கோலாகலமாக வரவேற்கப்பட்டான். எத்தனையோ முறை மயிரிழையில் தப்பி, உயிரோடு வந்து சேர்ந்தானே தலைவன் என்று மக்கள் மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தனர். பிறகு நான்சிங் நகரம் வந்தான். இருபத்தியொரு குண்டுகள் முழங்க வரவேற்கப்பட்டான்.

1913 ஜனவரி திங்கள் குடியரசு நிறுவப்பட்டதென்றும், அதற்குத் தற்காலிகத் தலைவன் சன்-யாட்-சன் என்றும் பிரகடனம் வெளியாயிற்று.

துரோகி யுவான் ஷிகாய் நல்லவன் போல் நடித்தான். மஞ்சு அரசாங்கமும் வேண்டாம், குடியரசு முறையும் வேண்டாம். தானே ஒரு சர்வாதிகாரியாக வேண்டுமென்ற உள்

பூ, 102 உ,-9