பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E

சாக்ரடீஸ்

ஏதன்ஸ் நகரின் கலைக்கோயிலின் தலை வாயிலிலே கம்பீர மாக நிற்கின்றான் ஒரு கத்துவ ஞானி சிலை உருவில். தலை சிறந்த தர்க்கவாதி. தன்னைத்தானே அறிந்து, தான் அறிந் ததை அகில உலக மக்களறிய ஆவல்கொண்டு, அறிவு தாகத் தால் அலைந்து கொண்டிருந்த இளைஞர்களின் இதயத்தைத் தொட்டு, அவர்கள் மன இருளை நீக்கி, ஒளி பரப்பிய அறிஞன். அவனுக்கு முன்னும் பின்னும் அவனைப் போல் ஒருவன் இருந்த தில்லை. - -

ஏதென்ஸ் நகர மக்களைப் பற்றி மெகாலே பின்வருமாறு கூறுகிருன்: ‘ஏதென்ஸ் நகர மக்கள் பிற நாட்டு மக்களைக் காட்டிலும் பன்மடங்கு அறிவிற் சிறந்தவர்கள். ஏதென்சில் கிரேக்க நாடுகளில் ஏன், உலகத்தில் எவ்வளவோ மாற்றங்கள் தோன்றின. ஆல்ைசாக்ரடீஸ் அன்று தோன்றியவன் இன்றும் எழுத்துருவில்-கருத்துக்களில் தோன்றுகிருன். அறிவுலகில் அழியாமல் நிலவுகிருன்’’.

வாவிபத்தில் ஆர்கோஸ் என்ற பண்டிதருடன் ஒரு முறை

சாமாஸ் நகருக்குச் சென்று, அந்தநாட்டில் புகழோடு வாழ்ந்த பேரறிஞர் சீனுே (zeno) என்பவரிடம் எதிர்மறை முகத்தான் வாதாடுவது எப்படி என்பதைக் கற்று வந்தான்,