பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள்

143


இவனுக்கு முன் டையகோரஸ் இதையே பேசினான். முக்கியமாகக் கடவுளர்களைப்பற்றிப் பேசினான். சிறப்பாகச் சில ஆபாசக் கருத்துக்களடங்கிய, அதாவது தாயையே தாரமாக்கிக்கொண்ட ஏராஸ், தங்கையைத் தாரமாக்கிக் கொண்ட ஜூவெஸ் போன்ற கிரேக்கக் கடவுள்களைப் பற்றியும், பிறவற்றைப்பற்றியும், கருத்தில்லா பூசாரிகளும் மதத் தலைவர்களும் கட்டிவிட்ட பொய்க்கதைகளைப் போருக்கழைத்தான் டையகோரஸ். சிரித்தனர் சிலர். சீறினர் பலர். ஒளியில்லாத காலத்தில் வாழ்ந்த அந்த மக்களால், சிந்தைக்குச் செயல் கொடுக்க எண்ணாத அந்தக் கிரேக்கத்தின் பெருங்குடி மக்களால் ‘டையகோரஸ் அழிக்கப்பட வேண்டியவன்’. அந்தக் கொக்கரிப்பை கண்டு பயந்த டையாகோரஸ் கோரிந்த் என்னும் நகருக்குள் ஓடி ஒளிந்து கொண்டான்.

டையகோரஸ் உயிரை நேசித்தான். ஓடி ஒளிந்தான். சாக்ரடீஸ் கொள்கையை நீதியை, நாட்டை நேசித்தான். அநீதியை எதிர்த்து நின்றான்.

சாக்ரடீசின் காலம் இன்றைக்கு ஏறத்தாழ 2450 ஆண்டுகளுக்கு முன்பாகும். இயேசு தோன்றாத காலம். நபிகள் பிறக்காத காலம். சமணம், புத்தம், டாயஸ், சீக்கியம், ஜைனம் போன்ற மதங்கள் தோன்றாத காலம்.

இளமையில் இயற்கை நூல், பெளதிகம், வானநூல், நிலநூல் ஆகியவைகளைப் பற்றி நன்கு படித்துணர்ந்து, முதல் முதல் மனைவி இறக்க, தனது 40வது வயதில் இரண்டாவது மனம் செய்துகொண்டு, பிலிப்போனேஷிய யுத்தத்தில் காலாட்படையில் போர் வீரனாகச் சேர்ந்த, போட்டீடோ என்ற ரணகளத்தில் தன் படைத் தலைவனுடைய தலையைக் காப்பாற்றி, அதற்குச் சன்மானமாகத் தான் பெற வேண்டிய இராணுவ கெளரவத்தைத் தன் படைத் தலைவன் ஆல்கிபிடியாஸ் என்பவனே அடையும்படிச் செய்த பொதுநலவாதி சாக்ரடிஸ்.

டேலியம், அம்பிபோலீஸ் என்ற இரு பயங்கரமான போர்க்களத்தில், தன் நாட்டுப் போர் வீரர்கள் சலித்துப்